• Sep 21 2024

பெட் ரூமில் போதையில் இருக்கும் மஹா... கடுப்பாகித் திட்டிய சூர்யா... பதிலுக்கு மனைவி செய்த செயல்... சூப்பரான 'Aaha Kalyanam' ப்ரோமோ வீடியோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் அதிரடித் திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகும் ஒரு அழகான சீரியல் ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளையை தங்கச்சி கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொள்வதால் அவர் அனுபவிக்கின்ற துன்பங்கள், துயரங்கள் என்ன என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது. 


இந்நிலையில் இந்த சீரியலின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் மஹா குடிபோதையில் போதை தலைக்கேறி படுத்திருக்கின்றார். அந்த சமயத்தில் சூர்யா ரூமிற்குள் வருகின்றார்.


அப்போது சூர்யாவிடம் மஹா "என்னடா ஏன் லேட்" எனக் கேட்டுக்கொண்டே கீழே விழுகின்றார். பதிலுக்கு சூர்யா மரியாதை இல்லாமல் புருஷனை என்னென்னம்மோ பேசுறாய் எனக் கேட்க மஹா பதிலுக்கு அப்படிதான் பேசுவேன் எனக் கத்துகின்றார்.


அதற்கு சூர்யா இதெல்லாம் நீ பேசல, உள்ள இருக்கிற போதை பேசுது என்கிறார். மேலும் மஹா "ஏன் என்றால் நீ என்னை எவ்வளவோ டார்ச்சர் பண்ணி இருக்காய், ஆனால் நான் உன் மேல இருக்கிற லவ் இல் அதையெல்லாம் பொறுத்திட்டு போறேன், நீ என்னை தேடி ஸ்டோர் ரூம் வந்து என்ன கலாட்டா பண்ணியிருப்பாய், அதே கலாட்டாவை நான் இப்போ பண்ணப்போறேன்" எனக்கூறி சூர்யாவை தொட்டுத்தொட்டு பேசுகின்றார். ஆனால் சூர்யாவோ விலகி விலகி நடக்கின்றார். 

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!  


Advertisement

Advertisement