• Sep 20 2024

ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ள ஆளவந்தான் திரைப்படம்- அதுவும் இத்தனை திரையரங்குகளில் வெளியாகவுள்ளதா?

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2001ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் ஆளவந்தான். இந்தப் படத்தில்  கமல் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். மேலும், மனிஷா கொய்ராலா, ரவீனா டான்டன், அனு ஹாசன் என பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

 இந்த படத்தில், கடவுள் பாதி... மிருகம் பாதி... உள்ளே கடவுள் வெளியே மிருகம் விளங்க முடியாத கவிதை நான் எனக் கமலஹாசனின் நடிப்பு பலரின் பாராட்டை பெற்றது. படம் வெளியான போது பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.இப்படத்தில் அதி நவீன டெக்னாலஜியாகக் கருதப்பட்ட motion control camera பயன்படுத்தப்பட்டது. 


இந்தியாவில் இந்த டெக்னாலஜி முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்ட படம் ஆளவந்தான் படம் தான்.இந்த படம் குறித்து அண்மையில் பேட்டி அளித்திருந்த தயாரிப்பாளர் தாணு இன்றைய தலைமுறையினருக்கு ஆளவந்தான் படம் ஒரு உத்வேகமாக இருக்கும் என்பதற்காக ரீ ரிலீஸ் செய்யும் திட்டம் உள்ளது எனத் தெரிவித்தார்.


 இந்நிலையில், ஆளவந்தான் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, ஆளவந்தான் படம் 22 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் ரீதியாக மேம்படுத்தப்பட்ட படமாக 1000 திரையரங்குகளில் உலகமெங்கும் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை உலக நாயகன் கமல்ஹாசன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Advertisement

Advertisement