• Sep 20 2024

அமீர் - பாவனி ஜோடி மேடையில் கூறிய மகிழ்ச்சி செய்தி-குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய சின்னத்தம்பி என்ற சீரியலில் பிரஜனுக்கு ஜோடியாக நடித்து பிரபல்யமானவர் தான் பாவனி ரெட்டி. கிராமத்து கதைக் களத்தில் அமைந்த இந்த சீரியலில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி முன்னணி நடிகையாகவும் கவரப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து சன்டிவியில் ராசாத்தி என்னும் சீரியலில் நடித்து வந்தார் அதுவும் இடைநிறுத்தப்பட்டது. இதனால் சில காலம் சின்னத்திரையில் தலை காட்டாமல் இருந்த இவர் பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபல்யமானார்.




இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அபிநய் உடன் கிசுகிசுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து வைல்ட்காட் என்ரியாக நுழைந்த அமீருடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆரம்பத்தில் இது வெறும் கிசுகிசுவாகவே பார்க்கப்பட்ட நிலையில் அமீர் பாவனியை உண்மையாகவே காதலிப்பதாக பல்வேறு நிகழ்ச்சிகளிலும் வெளிப்படுத்தி வருகின்றார்.



பி பி ஜோடி நிகழ்ச்சியில் கூட அமீர் பல முறை அவருக்கு ப்ரபோஸ் செய்து விட்டார். இந்நிலையில் அமீர் - பாவனி ஜோடி இன்று ஒளிபரப்பான BB ஜோடிகள் ஷோவின் பைனலில் டைட்டில் ஜெயித்தது. அதன் பின் அவர்கள் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தனர்.



பாவனி மற்றும் அமீர் இருவரும் சேர்ந்து ஜோடியாக ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார்களாம். மேலும் அந்த விஷயத்தை தான் மகிழ்ச்சியாக அறிவித்தனர். அவர்களுக்கு தற்போது வாழ்த்து குவிந்து வருகிறது.  

Advertisement

Advertisement