• Sep 21 2024

அமீர் மற்றும் பாவனி நடித்த செந்தாமரையே ரொமாண்டிக் பாடல் ரிலீஸ் ஆகியாச்சு

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதல் ஜோடிகளாக அறிமுகமாகியவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. இதில் சின்னத்திரை நடிகையாக பாவனி விஜய் டிவியில் ரெட்டை வால் குருவி, சின்னத்தம்பி போன்ற சீரியல்களிலும் சன்டிவியில் ராசாத்தி சீரியலிலும் நடித்திருக்கின்றார்.

மேலும் அமீர் விஜய் டிவி நிகழ்ச்சிகளின் நடன இயக்குநராக வலம் வந்தவர். இதில் பாவனி பிக்பாஸின் ஆரம்பத்திலேயே பங்குபற்றினார். ஆனால் அமீர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் காட் என்ட்ரியாக நுழைந்தார்.

இதனை அடுத்து இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி டைட்டில் வின்னராகவும் தேர்வானார்கள்.இதனைத் தொடர்ந்து காதலர்களாக வலம் வரும் இவர்கள் அடுத்த வருடம் திருமண பந்தத்திலும் இணைய உள்ளர்.

இந்த நிலையில் இவர்கள் நடித்த ஆல்பம் பாடலான செந்தாமரையே பாடல் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement