பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதி வரைக்கும் சென்றவர் தான் பாவனி. ஆனால் அமீர் வைலட்காட் என்ட்ரியாக நுழைந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே அமீர் பாவனியைக் காதலிப்பதாக பலமுறை தெரிவித்திருந்தார்.ஆனால் பாவனி அதனை பொருட்படுத்தாது தம்பி எனக் கூறி வந்தார். இதனை அடுத்து இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு நடனமாடி வந்தனர்.
அத்தோடு பிபி ஜோடிகளிலும் பல முறை அமீர் தனது காதலை வெளிப்படுத்தி இருந்ததோடு இருவரும் சிறப்பாக நடனமாடி டைட்டில் வின்னர் பட்டத்தையும் தட்டிச் சென்றனர். இதனை அடுத்து பாவனியும் அமீருடைய காதலுக்கு ஓகே சொல்லி விட்டார்.
இது ரசிகர்களுக்கு கடும் குஷியை ஏற்படுத்தியுள்ளதோடு இவர்கள் இருவரின் திருமணமும் அடுத்த ஆண்டு நடைபெறும் என்றும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் பாவனி மற்றும் அமீர் நடிப்பில் ஒரு மியூசிக் ஆல்பம் உருவாகி வருவதாகவும் அதன் டைட்டில் இன்றைய தினம் 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Listen News!