விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் சீசன் 5இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி.இதில் 3வது வெற்றியாளராக பாவனியும் 5வது வெற்றியாளராக அமீரும் வெற்றி பெற்றனர்.
இதில் பாவனி சின்னத்திரையில் சின்னத்தம்பி ராசாத்தி போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.இந்த நிகழ்ச்சியில் தனது கணவர் தற்கொலை செய்துக் கொண்டது குறித்து வெளிப்படையாக பேசி அனைவரது அனுதாபங்களையும் சம்பாதித்தார்.
இதில் வைல்ட் கார்ட் சுற்றில் பங்கேற்ற நடன இயக்குநர் அமீர், பாவனியைக் காதலிப்பதாக தெரிவித்திருந்தார்.ஆனால் இந்த காதலை ஏற்றுக் கொள்ளாமல் தற்போது வரை சமாளித்து வருகின்றார்.ஆனால் இவர்கள் இருவரும் பல இடங்களில் சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமீரின் பிறந்தநாளையொட்டி பாவனி தனது சமூக வலைதளப்பதிவில் அவர்போன்ற ஒரு நபரை தான் பார்த்ததில்லை என்றும் ஐ லவ் யூடா என்றும் கூறி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம் அமீர் மீதான தனது காதலை அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே அமீரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் பாவனி பங்கேற்றுள்ளார்.
தற்போது இதன் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தனது பிறந்தநாளையொட்டி நண்பர்கள் முன்னிலையில் கேக் வெட்டும் அமீர், உடனடியாக பாவனிக்கு கேக்கை ஊட்டி விடுகிறார். தன்னுடைய நண்பர்கள் பலர் இருந்தாலும் பாவனிக்குத்தான் அவர் முக்கியத்துவம் தருகிறார்.
உடனே மற்றவர்களுக்கு கொடுக்கும்படி பாவனி ரியாக்ட் செய்வதும் அழகாக உள்ளது. ஆனால், அமீர் அவரை வற்புறுத்தி கேக்கை ஊட்டி விடுகிறார். இந்த வீடியோவில் அவர்களது ஜோடி மிகவும் அழகாக காணப்படுகிறது. இந்த வீடியோவை ரசிகர்களை அதிகமாக லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ரம்யா பாண்டியனின் கவர்ச்சிக்கு கிடைத்த பலன்…மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்…!
- சூரியின் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அவரது மகனும் நடிக்கின்றாரா?…வெளியான புதிய அப்டேட்
- சைக்கிளிங் மீது காதல் கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…வெளியான புகைப்படம்…!
- களை கட்டப் போகும் குக் வித் கோமாளி பினாலே…போட்டியாளர்கள் அனைவரும் ஒரே மேடையில் சங்கமிக்கும் தருணம்… வெளியாகிய புரோமோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!