• Nov 19 2024

இந்த விடயத்தை அப்பா தான் செய்யனும் ..யுவனுக்கு கண்டிஷன் போட்ட அமீர்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த சேது படத்தில் நடிகராக திரையுலகில் அறிமுகமானவர் தான் அமீர்.அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து மெளனம் பேசியதே படத்தை இயக்கி இயக்குநர் ஆனார்.

இவ்வாறு இருக்கையில் பருத்திவீரன் திரைப்படம் இயக்குநர் அமீருக்கு தமிழ் சினிமாவில் தனி அங்கீகாரத்தையும் முன்னணி இயக்குநர் என்கிற அடையாளத்தையும் வழங்கியது.இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வடசென்னை, மாறன் உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் அமீர்.

2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே படத்தை இயக்கினார் அமீர். சூர்யா, த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.மேலும் இந்த படத்திற்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்திடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

மௌனம் பேசியதே படத்துக்கு பிறகு மூன்று வருடங்கள் கழித்து இவர் இயக்கிய திரைப்படம் தான் ராம். மேலும் இந்த படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு அம்மா கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான கதை களம் கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

அத்தோடு ராம் படத்தில் இடம் பெற்றுள்ள அம்மா பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. மௌனம் பேசியதே, ராம் போன்ற இரண்டு படத்திலும் யுவன் சங்கர் ராஜா அமீர் கூட்டணி ஒன்று சேர்ந்து வெற்றி பெற்றது. எனினும் இதைத்தொடர்ந்து அறிமுக நாயகனாக கார்த்தி நடித்த பருத்திவீரன் திரைப்படத்தை இயக்கினார் இயக்குநர் அமீர். மேலும் இந்த படத்தில் பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன் போன்ற பலரும் நடித்திருந்தனர்.

மேலும் இது அமீருக்கு வெற்றி படமாக அமைந்தது மட்டுமில்லாமல் அறிமுக நாயகனாக இருந்த கார்த்திக்கும் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடங்களும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அறியாத வயசு புரியாத மனசு என்ற பாடலை பாடியிருந்தார் இசைஞானி இளையராஜா. அத்தோடு இந்த பாடல் குறித்து சுவாரசியமான தகவல்களை இயக்குநர் அமீர் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து இயக்குநர் அமீர் தெரிவிக்கையில்…. யுவன் சங்கர் ராஜாவிடம்" உங்கள் அப்பா இந்த பாடலை பாடினால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்கு தெரியாது இந்த பாடலை அவர் தான் பாட வேண்டும் என்று நான் கூறிவிட்டேன். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை இளையராஜா கேட்டுவிட்டு இந்த பாடலை பாடி கொடுத்தார். அந்த பாட்டில் இருக்கிற சின்ன சின்ன மாற்றத்தை நான் சொன்னதும் அதை அப்படியே பாடி கொடுத்தார் இளையராஜா" என்று அமீர் தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே இளையராஜா பாட வந்தால் யுவன் சங்கர் ராஜா ஸ்டுடியோவில் இருக்க மாட்டாராம் அவரது இன்ஜினியர் தான் பாடலை ரெக்கார்ட் செய்வார் என்று அமீர் வேறு ஒரு போட்டியில் தெரிவித்துள்ளார். அமீர் கூறிய இந்த சுவாரஸ்ய தகவல்கள் தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

Advertisement

Advertisement