• Nov 14 2024

லவ் லெட்டர் கொடுத்து Propose செய்த அமீர் – பாவனி என்ன செய்தார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டு இருப்பவர் அமீர்- பாவனி. இவர்கள் காதலிப்பதாக செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது அமீர், பாவனிக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்கும் தகவல் சமூகவலைத்தளத்தில் ஜெட் வேகத்தில் வைரலாகி வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர் பாவனி ரெட்டி. இவர் சின்னத்திரையில் ஆரம்பத்தில் ‘ரெட்டை வால் குருவி’ ‘தவணை முறை வாழ்க்கை’ போன்ற சீரியல்களில் நடித்து இருந்தார்.

இதன் பின் இவர் சின்ன இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். அத்தோடு , இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். இதனிடையே பாவனி கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து இருந்தார். ஆனால், ப்ரதீப் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

எனினும் அதன் பின் சிறிது காலம் பாவனி மீடியாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது இவர் சீரியல்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார். அது மட்டுமில்லாமல் 11 முறை நாமினேஷனில் பாவனி வந்து இருந்தார் . இருந்தும் அவரை நாமினேஷனில் காப்பாற்றி இறுதி சுற்றுக்கு அனுப்பி வைத்து இருந்தார்கள் ரசிகர்கள். அதோடு பிக் பாஸ் சீசன் 5 இறுதி போட்டியாளர்களாக பாவனி தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.

அத்தோடு , எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு பிக் பாஸ் சீசன் 5ன் டைட்டில் பட்டத்தை தட்டி சென்றார். இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தை பவானி பிடித்து இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனியை அமீர் காதலித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அமீர் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து இருந்தார் . ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தாலும் திடீர் என்று ஒரு நாள் அமீர், பாவனிடம் உன்னை காதலிக்கிறேன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

ஆனால், பாவனி, அமீரை தம்பி என்று சொல்லியும், இல்லை என்றும் மறுத்து வந்திருந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாவனி- அமீர் இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது, நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, வெளியே சுற்றுவது என்று இருந்தார்கள். இதனால் ரசிகர்கள் மத்தியில் இவர்கள் காதலிக்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்தது. எனினும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர்-பாவனி இருவரும் பங்கேற்று நடனம் ஆடி வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் இவர்கள் நெருக்கத்தைப் பற்றி இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் பாவனி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அமீரை காதலிப்பது குறித்து மறைமுகமாக பதிவு போட்டிருந்தார். மேலும் இப்படி அமீர்- பாவனி செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது இவர்கள் இருவரும் பிபி ஜோடியில் வெறித்தனமாக பிராக்டிஸ் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அமீர் பாவனியிடம் லவ் லெட்டர் ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ தான் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement