• Nov 19 2024

மூட்டை தூக்கும் அமீரின் அண்ணன்- கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்-வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமானவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. இவர்கள் இருவரும் தற்பொழுது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடியாக நடனம் ஆடி வருகின்றனர்.அந்த பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை ராஜு மற்றும் ப்ரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர்.

மேலும் அமீர் பாவனியை காதலிப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே தெரிவித்திருந்தார்.இதனை அடுத்து  இவர்கள் இருவரும் பி பி ஜோடிகளில் போட்டியாளர்களாக பங்கு பற்றி வருகின்றனர்.

அந்த நிகழ்ச்சியிலும் அமீர் தனது காதலை வெளிப்படுத்திய வண்ணமே உள்ளார்.தற்போது  பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே  சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. அதன் ஒளிபரப்பு வரும் செப்டம்பர் 4ம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர்-பாவனி வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

 இந்நிலையில் அமீர் தனது அம்மா இறந்த பிறகு பிரிந்து வந்த அண்ணனை முதல் முறை அமீர் அறிமுகப்படுத்தியுள்ளார்.



அதில் அவரது அண்ணா தற்போது மூட்டை தூக்கும் வேலை பார்த்து வருகிறாராம்.தனது அம்மா இறப்பிற்கு அண்ணனும் ஒரு காரணம் என அவருடன் பேசாமல் இருந்த அமீர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தான் அவருடன் பேசுகிறாராம் என கண்கலங்கி கூறுகின்றார்.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement