தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகையாக வலம் வருபவர் தான் ஆர்த்தி .இவர் கிரி, படிக்காதவன் தோரணை எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தற்பொழுதும் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தனது கணவருடன் இணைந்து பி பி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருகின்றார்.
இதற்கு முன்னதாக் பிக்பாஸ் சீசன் 1 இல் கலந்து கொண்டவர். இந்த நிலையில் நடிகை நயன்தாரா தனது திருமணத்திற்காக அலங்கரித்தது போலவே தன்னை அலங்கரித்து புகைப்படம் வெளியிட்டிருந்தார்.
அதில் ஒரு புறம் நயன்தாராவின் திருமண புகைப்படமும், மறுபுறம் அதே உடையில் ஆர்த்தி இருக்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. மேலும், தனது கேப்ஷனில், "என்ன கொடுமை இது 😆😂Expectation vs reality" என தனது லுக்கை அவரே கலாய்த்து குறிப்பிட்டிருந்தார்.
ஆர்த்தியின் இந்த ட்வீட்டை கவனித்த இயக்குநர் விக்னேஷ் சிவன், அதனை பகிர்ந்து, "நீங்கள் இன்னும் அழகாக இருக்கிறீர்கள் ஆர்த்தி" என குறிப்பிட்டுள்ளார். நயன்தாராவின் திருமண லுக்குடன் இணைத்து, ஆர்த்தி போட்ட ட்வீட்டும், அதற்கு விக்னேஷ் சிவன் கொடுத்த ரியாக்ஷனும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!