• Sep 20 2024

சுடருக்காக அதிரடி முடிவெடுத்த வெற்றி... போட்டுக் கொடுத்த கண்மணி... உயிர்விடத் துணிந்த அபி... விறுவிறுப்பான ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் 'தென்றல் வந்து என்னைத் தொடும்'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலும் அதிரடித் திருப்பங்களோடு அட்டகாசமாக சென்று கொண்டிருக்கின்றது. 


இந்நிலையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் வெற்றி "சித்தப்பு நான் உடனே ஆந்திரா, மாஹராஸ்திரா, ராஜஸ்தான் போகணும், ஒருவேளை சுடர் என்னுடைய பிள்ளையாக இருந்திச்சுன்னு வை, அந்த பேர்த் செர்டிபிகேட் 3ஊர்ல ஏதாவது ஒரு ஊர்ல தானே இருக்கணும்" எனக் கூறுகின்றார்.


மறுபுறம் கண்மணி அபிக்கு கால் பண்ணி "உங்ககிட்ட இருந்து உங்க பொண்ணு சுடரைப் பிரிச்சு வெற்றி கூட வைக்க உங்க கூடவே இருக்காங்களே விஜிம்மா அவங்க ரொம்பத் தீவிரமாக உதவி பண்ணிட்டு இருக்காங்க" எனக் கூறுகின்றார். 

பின்னர் விஜிம்மாவிடம் அபி "வெற்றிகிட்ட சுடர் பற்றி சொல்ல மாட்டேன் என்று எங்கிட்ட சத்தியம் வாங்கியிருக்கீங்க, சுடர் எங்கிட்ட இருந்து பிரிஞ்சால் அது என் உயிரே போன மாதிரி" எனக் கூறி உயிர் விடக் கூடித் தயங்க மாட்டேன் என்பதை புரிய வைக்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.   


Advertisement

Advertisement