• Nov 14 2024

ரசிகர்களைச் சந்தித்த லோகேஷ் கனகராஜுக்கு நடந்த விபரீதம்- திடீரென மருத்துவமனையில் அனுமதி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில், உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம், இந்தியா மற்றும் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று வருகிறது. நேற்றைய தினம் இப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்த தகவல் வெளியாகி ஒட்டு மொத்த ரசிகர்களையும் உச்சாகமடைய செய்தது. 

இதை தொடர்ந்து இந்திய வர்த்தக அறிக்கைகளின்படி, 'லியோ' இந்தியாவில் மட்டும் ஐந்து நாட்களில் ரூ.200 கோடி வசூலை தாண்டியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல் உலக அளவில் லியோ 438 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை மட்டும் இன்றி, படக்குழுவினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. 


லோகேஷ் கனகராஜின் LCU படமாக வெளியாகியுள்ள லியோ, ஒருபுறம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், ரசிகர்கள் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக கேளரா ரசிகர்களைச் சந்தித்து இருக்கின்றார்.

ஞாயிற்று கிழமை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லோகிக்கு எதிர்பாராத விதமாக காலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக அவர், உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement