• Sep 20 2024

சம்பளத்தை மறைத்த விஜய்-சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்பவர் தான் நடிகர் விஜய்.இவர் நடிக்கும் படங்களும் சரி இவர் வாங்கும் சம்பளமும் சரி அதிகமாகவே காணப்படும்.

இவ்வாறு இருக்கையில் இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்துவருகின்றார்.அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்த வண்ணமே உள்ளது.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

அத்தோடு விஜய் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புலி.  இப்படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய ரூ. 15 கோடி சம்பளத்தை மறைத்தகாக கூறி, நடிகர் விஜய்க்கு வருமான வரி துறையினர் ரூ. 1.5 கோடி அபராதம் விதித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்டிருந்த ரூ. 1.5 கோடி அபாரதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடையென உத்தரவிட்டுள்ளது.


Advertisement

Advertisement