• Sep 20 2024

லியோ திரைப்பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் _ விஷால்

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்


அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19 அதாவது நாளை   பல மொழிகளில் வெளியாகவுள்ளது.


இந்நிலையில் நடிகர் விஷால்  இப்படக்குழுவினருக்கும் ,இளைய தளபதி விஜய்க்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் எனக்கு பிடித்த, உங்கள் எல்லோருக்கும் பிடித்த  விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்தப்படம் ரசிகர்களுக்கு செம ரீட் ஆக இருக்கும். கண்டிப்பாக இந்த படத்தை பாருங்க, உங்கள் எல்லாருக்கும் பிடிக்கும் என நம்புகின்றேன். இளைய தளபதி விஜய், இயக்குனர் லேகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் ,பட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என கூறி வாழ்த்தியிருக்கின்றார்

Advertisement

Advertisement