• Nov 17 2024

வறுமையின் கோரப்பிடியில் நடிகர் அப்பாஸ்…அவருக்கா இப்படியொரு நிலமை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்  திரையுலகில்  சாக்லெட் பாயாக வலம் வந்தவர் தான் நடிகர் அப்பாஸ். இவர் இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1996 -ம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே இவருக்கு பல பெண் ரசிகர்கள் உருவாகினார்கள். எனினும் இதையடுத்து பல படங்களில் ஹீரோவாகவும் மற்றும் முன்னணி நடிகர்கள் படங்களில் இரண்டாம் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

அத்தோடு கடைசியாக அப்பாஸ் மலையாளத்தில் 2015 -ம் ஆண்டு வெளியான பச்சகல்லம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

எனினும் தற்போது அப்பாஸ் குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆகியுள்ளார். வயிற்று பிழைப்பிற்காக நியூஸிலாந்தில் பெட்ரோல் பங்க் , பாத்ரூம் கிளீனர் உள்ளிட்ட வேலைகளை செய்து வருவதாக சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில் அப்பாஸ் தற்போது பைக் மெக்கானிக் வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரிய ஸ்டார் நடிகராக இருந்தவருக்கே நிலைமை இப்படி சறுக்கிவிட்டதே என பலர் வேதனை அடைந்துள்ளனர்.


Advertisement

Advertisement