• Nov 17 2024

நடிகர் அப்பாஸின் மகளா இவங்க...? அடேங்கப்பா எவ்ளோ பெரிசா வளர்ந்திட்டாங்க...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாத் திரையுலகில் குறிப்பாக 90 காலப்பகுதியில் பல ரசிகைகளின் மத்தியில் கனவு கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். அதுமட்டுமல்லாது பல ரசிகர்களின் மனங்களில் சாக்லேட் பாயாகவும் திகழ்ந்து வந்திருந்தார்.


இவர் 1996-ஆம் ஆண்டு காதல் கதையை மையமாக கொண்டு வெளியான 'காதல் தேசம்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பல தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர். இதனைத் தொடர்ந்து படிப்படியாக மேலும் பல படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை நிரந்தரமாக வைத்திருந்தவர். 


சினிமா துறையில் நடிக்க வருவதற்கு முன்னர் அப்பாஸ் ஒரு மாடல் ஆகவும் இருந்து வந்துள்ளார். இவர் தமிழினைத் தொடர்ந்து கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்திருக்கின்றார். இவ்வாறாக பல மொழி படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகைகளையும் தன் வசம் ஈர்த்துக் கொண்டார். 


எனினும் ஒரு கட்டத்தில் இவருக்குப் போதியளவு பட வாய்ப்புகள் வரவில்லை. அதன் காரணமாக பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தினருடன் நியூசிலாந்தில் செட்டிலாகி விட்டார். இவரின் மனைவி அங்கு பிரபல ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.


நடிகர் அப்பாஸும் முன்னணி நிறுவனத்தில் நல்ல சம்பளத்துக்குப் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகின்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மக்கள் உள்ளனர். மகன் ஏமான் மற்றும் மகள் எமிரா இருவரும் நியூசிலாந்தில் தான் படித்து வருகிறார்கள்.


இந்த நிலையில் அப்பாஸ் மகளின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. அப்புகைப்படத்தில் அப்பாஸின் மகள் ரொம்பவே வளர்ந்திருக்கின்றார். இப்புகைப்படத்தினை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement