தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திர நடிகர்களில் முக்கியமானவர் தான் அஜித். நடிப்பதைத் தாண்டி பைக் ரேசிங் செய்வது நாடுகளுக்கு டூர் செல்வது போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றார். இந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய வலிமை திரைப்படத்திலும் பைக் ரேஸ் செய்திருந்தார்.
இப்படத்தைத் தொடர்ந்து தனது 61வது படத்தில் நடித்து வந்தார். இப்படத்தையும் எச். வினோத் தான் இயக்குவதோடு போனி கபூர் தயாரித்து வருகின்றார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் அஜித் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பானது நிறைவடைந்ததைத் தொடர்ந்து தற்பொழுது ஐரோப்பாவிற்கு டூர் சென்றுள்ளார். இந்த நிலையில் இவரது அடுத்த படமானது எப்படி இருக்கும் என ரசிகர்களிடையே அதிகளவான எதிர்பார்ப்பானது காணப்படுகின்றது.
இன்னும் ஒரு வாரத்தில் சென்னை திரும்பும் அஜித் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ளார். அங்கு எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் காலையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதற்கிடையே தற்போது அஜித் அவரின் குட்டி ரசிகை ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியுள்ளது. செம கியூட்டான அந்த புகைப்படம் ரசிகர்களிடையே செம வைரலாகி வருவதைக் காணலாம்.
பிற செய்திகள்
- ஒரு மாதம் கழித்து நயன்தாராவின் திருமணப்புகைப்படங்கள் வெளியாக இது தான் காரணமா?- இப்படி ஒரு மாஸ்டர் பிளான் இருந்ததா?
- கடுங் கோபத்தில் கூல் சுரேஷை அடிக்கப் பாய்ந்த நடிகர் மன்சூர் அலிகான்- அட இது தான் காரணமா?
- உதயநிதிக்கு தந்தையான வடிவேலு- மாமன்னன் படத்திலிருந்து வெளியாகிய புதிய அப்டேட்-
- பக்ரீத் பண்டிகையை தனது குடும்பத்துடன் இணைந்து கோலாகலமாகக் கொண்டாடிய நஸ்ரியா- அட மகள் நன்றாக வளர்ந்து விட்டாரே
- சமூக ஊடகங்களில்
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!