தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித்.இவர் தற்பொழுது தனது 61 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தையும் வலிமை பட இயக்குநரான எச். வினோத் இயக்கி வருகின்றார்.
இப்படத்தினை போனிகபூர் தயாரிப்பதோடு முதற்கட்டப்பட்பிடிப்பானது ஐதாராபாத்தில் இடம் பெற்றது. இரண்டாம் கட்டப்படப்பிடிப்பானது புனேயில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் திடீரென படப்பிடிப்பை நிறுத்தி விட்டு ஐரோப்பாவிற்கு டூர் சென்று விட்டார்.
குடும்பத்துடன் அவர் லண்டனில் வெளியே வந்த வீடியோக்கள், புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியாகி வந்தன. இதனால் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
இந்த நிலையில் தற்போது 61வது படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்காக சென்னை வந்துவிட்டார் நடிகர் அஜித். அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது எடுக்கப்பட்ட வீடியோ இப்போது டுவிட்டரில் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.
பிற செய்திகள்
- யாரும் நம்பி ஏமாந்துடாதீங்க.. கோரிக்கை வைத்து விஷால் மேனேஜர்
- இரவு முழுவதும் அவர விடாம பாத்துக்கிட்டே இருப்பேன் – நடிகை அதுல்யா ரவி
- ஈஸ்வரி வைத்த செக்.. திருதிருவென முழிக்கும் கோபி – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!