• Sep 21 2024

திடீரென புத்தர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த நடிகர் அஜித்- ட்ரெண்டிங் ஆகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பைக் ரைடிங்கின் போது வட இந்தியாவில் உள்ள புத்தர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த நடிகர் அஜித்.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்பொழுது ஏகே 61 படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் இவருடன் கதாநாயகியாக நடிக்க மஞ்சுவாரியார் கமிட்டாகியுள்ளார். இதன் முதற் கட்டப்படப்பிடிப்பானது அண்மையில் தான் முடிவடைந்தது.

மேலும் இதன் அடுத்த கட்டப்படப்பிடிப்பில் அஜித்தும் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகின்றது.இந்த நிலையில் நடிகர் அஜித் தற்பொழுது காஷ்மீர், லடாக் என வட இந்திய எல்லையில் உள்ள குளிர் பிரதேசங்களில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக் பைக் ரைடிங் செய்து வருகிறார்.


இந்த பைக் ட்ரிப்பில்  நடிகை மஞ்சு வாரியரும் கலந்துகொண்டுள்ளார்.பைக் ரைடிங்கின் போது வட இந்தியாவில் உள்ள புத்தர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து உள்ளார் அஜித். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்கள் செம வைரல் ஆகி வருகிறது. 

ரைடிங் ஜாக்கெட் அணிந்தபடி அந்த கோவிலில் அஜித் வழிபாடு செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன.இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர் என்பதும் முக்கியமாகும். அஜித் இது தவிர விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62, சிறுத்தை சிவா இயக்கத்தில் ஏகே 63 என வரிசையாக படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement