தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் ஏராளமான நட்சத்திரப் பட்டாளத்தோடு உச்ச நடிகராக விளங்குபவர் நடிகர் அஜித் இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக்குவித்தது.
இதனைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் AK 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள AK61 திரைப்படத்தில் அஜித்தின் கெட்டப் செம வைரலாகியுள்ளது.
மேலும் அந்த கெட்டப்பில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம். அத்தோடு இப்படத்தின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் நடிகர் அஜித் அண்மையில் ரசிகர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் அஜித் ரசிகர்களிடையே பரவி வருவதைக் காணலாம்.
Listen News!