• Sep 20 2024

ரசிகர் ஒருவருக்காக நடிகர் அஜித் செய்த செயல்-லேட்டஸ்ட் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் அஜித். இவர் நடிப்பில் தற்பொழுது ஏ.கே 61 என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சுவாரியார் நடிக்கவுள்ளார்.

இப்படத்தினை போனிகபூர் தயாரித்து வருகின்றார். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பானது ஹைதராபாத்தில் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இது குறித்த புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.

எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் அஜித். அத்தோடு இப்படத்தின் First லுக் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் நடிகர் அஜித் தற்போது தனது நண்பர்களுடன் நாடு முழுவதும் பைக் ரைட் சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்கள் கூட தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது நடிகர் அஜித் தனது ரசிகர் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement