• Sep 20 2024

நயன்- விக்கியின் திருமணத்திற்கு வருகை தந்த நடிகர் அஜித் குடும்பம்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஏழு வருடங்கள் காதலை கடந்த நயன்-விக்கி தம்பதியினரின் திருமணம் இன்று இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றுள்ளது.

இவர்கள் மகாபலிபுரத்திலுள்ள நட்ஷத்திர ஹோட்டலில் பெரிய செட் அமைத்து மிக பிரமாண்டமான அளவில் 10.30 மணியளவில் இந்து முறைப்படி தாலி கட்டி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் விருந்தினர் அனைவருக்கும் திருமணத்திற்கு முன்பு ஒரு கோர்ட் அனுப்பி வைக்கப்படுமாம்.அந்த கோர்டை காண்பித்தால் தான் ரிசார்ட்டுக்குள் நுழைய முடியுமாம்.

காலை முதல் ரஜனி, ஷாருக்கான், அட்லி, டிடி , கார்த்தி என பல பிரபலங்கள் வந்து கொண்டு உள்ளனர்.

தற்போது அஜித்தும் தனது குடும்பத்துடன் நயன்-விக்கி திருமணத்திற்கு வந்துள்ளனர் என செய்திகள் வந்த நிலையில் ஷாலினி மற்றும் அஜித் மக்கள் அனோஷ்கா திருமணத்திற்கு வந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் கவனம் பெற்று வருகின்றது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement