• Sep 19 2024

தொடை அழகை காட்டி ரசிகர்களை வசியம் செய்யும் நடிகர் அர்ஜுனின் மகள்... என்னம்மா இது ட்ரெஸ்... வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் ஆக்‌ஷன் ஹீரோவாகவும் வலம் வருபவர் அர்ஜுன். இவரின் நடிப்பிற்கு அடிமையான ரசிகர் கூட்டமோ ஏராளம். அதிலும் இவரின் படங்களில் வரும் சண்டை காட்சிகளை பார்ப்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அந்தளவிற்கு சண்டை காட்சிகளில் பின்னி எடுப்பார்.



இவ்வாறாக தமிழ் சினிமாவில் இன்றுவரை நடிப்பினால் பட்டையை கிளப்பி வரும் நடிகர் அர்ஜுனின் மகளே ஐஸ்வர்யா. இவரும் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு பூபதி பாண்டியன் என்பவரின் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'பட்டத்து யானை' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.இப்படத்தில் இவர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் சந்தானமும் இவர்களுடன் இணைந்து நடித்திருந்தார்.



இப்படத்தினை தொடர்ந்து இவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புக்கள் கிடைக்காததால் 5 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார். பின்னர் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'சொல்லிவிடவா' என்ற படம் மூலம் மீண்டும் ஹீரோயினாக ரீ என்ட்ரி கொடுத்தார். இப்படமானது அவரது தந்தை அர்ஜுன் இயக்கத்திலும், தாயார் நிவேதிதாவின் தயாரிப்பிலும் அமைந்திருந்தது.



அறிமுகப் படத்தை போன்றே இப்படமும் தோல்வியைத் தழுவியதால் நடிப்புக்கு முழுக்கு போட்ட ஐஸ்வர்யா கடந்த 5 ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். எனினும் அதிர்ஷ்டவசமாக தற்போது இவருக்கு தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தையும் இவரது தந்தை அர்ஜுன் தான் இயக்குகிறார். பிரபல தெலுங்கு நடிகர் விஸ்வாக் சென்னிற்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கின்றார். நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகி  விறுவிறுப்பாக நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.



இந்நிலையில் ஐஸ்வர்யா தொடை தெரிய உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார். அதாவது குட்டை டவுசர் அணிந்து பளீச் என தொடை தெரிய போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள இப்புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. அதுமட்டுமன்றி பலரும் தமது கமெண்டுகள், மற்றும் லைக்ஸ்களை அள்ளிக் குவித்தும் வருகின்றனர்.

Advertisement

Advertisement