லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில் அடுத்தபடியாக சென்னையில் நடைபெற உள்ளது. காஷ்மீரில் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் படத்தைின் ஷுட்டிங்கை நடத்தி முடித்துள்ளார்கள் என்பது குறித்த வீடியோ அண்மையில் வெளியாகியிருந்தது.
மேலும் இப்படம் லோகேஷ் கனகராஜின் எல்சியு அடிப்படையில் உருவாகிறதா? இல்லை தனி படமாகவே உருவாகிறதா? என்கிற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இப்படத்தின் பூஜையின் போது கைதி படத்தில் நடித்த மரியம் ஜார்ஜ் கலந்து கொண்டார். படக்குழு காஷ்மீர் சென்றபோது படங்களுடன் விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீன் ஆக நடித்த வசந்தியும் இடம் பெற்றிருந்தார்.
இதனால் லியோ படமும் எல்சியு-வில் இடம்பெற்றுள்ளதாக கருதப்பட்டது. இந்த நிலையில் தற்போது விக்ரம் படத்தில் அமர் என்ற வேடத்தில் நடித்திருந்த பஹத் பாசிலும் விரைவில் லியோ படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திலும் அவர் அமராகவே வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கட்டாயம் இப்படமும் லோகேஷின் எல் சியூவாகத் தான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருவதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!