• Sep 20 2024

தனுஷின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த நடிகர் பரத்- இது தான் காரணமா?- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி ,ஆங்கிலம் எனப் பல மொழிகளில் நடித்து வரும் நடிகராக விளங்குபவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக நானே வருவேன் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. ஆனால் இப்படம் வெளியாகிய சில நாட்களிலேயே வந்த தடம் தெரியாமல் மறைந்து போனது.

அந்த அளவுக்கு மோசமான விமர்சனங்களைப் பெற்றதோடு வசூலிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டது.இதனைத் தொடர்ந்து தற்பொழுது வாத்தி என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பெஸ்ட் சிங்கிள் பாடல் இன்றைய தினம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.


மேலும் தனுஷ் நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் திருவிளையாடல் ஆரம்பம்.இப்படத்தை இயக்குநர் பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார்.

தனுஷ், பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா நடிப்பில் வெளியான அப்படம் அந்த வருடத்தின் மிக பெரிய ஹிட் திரைப்படமாக அமைந்தது.ஆனால் இப்படத்தின் கதையை முதன்முதலில் இயக்குநர் நடிகர் பரத்திடம் தான் கூறினாராம். பரத் இப்படத்தின் கதை அப்போது புரியாமல், தனக்கு செட்டாகாது என்ற தவறான எண்ணத்தில் நிராகரித்து விட்டாராம்.

இது குறித்து இப்போதும் வருத்தப்படுவதாக  பரத் பேட்டியொன்றில் தெரிவித்து இருக்கிறார்.மேலும் இப்போது நல்ல படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement