• Nov 14 2024

நடிகர் போண்டாமணிக்கு இலவசமாக சிகிச்சையளிக்கப்படும் - மருத்துவ செலவை ஏற்றுக் கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர்

stella / 2 years ago

Advertisement

Listen News!


நடிகர் போண்டாமணியை நேரில் சந்தித்து மருத்துவ செலவை ஏற்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இலங்கைச் சேர்ந்த காமெடி நடிகராக இருப்பவர் தான் நடிகர் போண்டாமணி. இவரது இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஓமந்தாரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

அது மட்டுமல்லாது பிரபல நடிகர் பெஞ்சமின் போண்டா மணிக்கு உதவுமாறு கண்ணீர் மல்க வீடியோ ஒன்றையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.இந்த நிலையில்  ஓமந்தாரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் போண்டாமணியை  நேரில் சந்தித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவரின் உடல்நலம் குறித்து விசாரித்ததோடு மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்த தகவலையும் கேட்டறிந்து கொண்டார்.


பின்னர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு சிறப்பு சிகிச்சை அளித்து வருவதாகவும், நாளை முதல் டையாலிசிஸ் சிகிச்சை துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


அத்தோடு அவரது உறவினர்கள் மூலமாகவோ அல்லது உறுப்பு தான ஆணையத்தின் மூலமாகவோ சிறுநீரகம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சைகள் அனைத்தையும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement