• Sep 21 2024

பகத் பாசிலுக்கு பதிலாக நடிகர் தனுஷ் - முக்கிய திரைப்படத்தில் நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் பகத் பாசில்.

இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகின்ற நிலையில் இவருக்கென்று தனிரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

மேலும் அவர் மலையாள திரைப்படங்கள் மட்டுமின்றி மற்ற மொழி திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அப்படி அவர் நடித்த விக்ரம் மற்றும் புஷ்பா உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு இந்தியளவில் பெரிய பெயரை பெற்று தந்தது.

மேலும் அப்படங்களை தொடர்ந்து அவர் நடிப்பில் Malayankunju என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டியளித்துள்ள பகத் பாசில் சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

ஆம் அவர் நடிப்பில் பெரிய வரவேற்பை பெற்ற Kumbalangi Nights திரைப்படத்தில் ஷமி கதாபாத்திரம் நடிகர் தனுஷிற்காக எழுத்தியதாம். ஆனால் அப்படத்தின் பட்ஜெட் காரணமாக தனுஷை தொடர்ப்பு கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார் பகத் பாசில்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement