• Sep 21 2024

இரவின் நிழல் திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிடவுள்ள நடிகர் தனுஷ்- அட செம நியூஸாக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வல் வருபவர் தான் பார்த்திபன். 90களில் பிரபல்யமான நடிகராக வலம் வந்த இவர் தற்பொழுது குணச்சித்திர வேடங்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.

இது தவிர புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். வித்தியாசமான கதைக்களங்களோடு திரைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வரும் இவர் தற்பொழுது ஒத்த செருப்பு என்னும் திரைப்படத்தை எடுத்தார். இப்படம் முழுக்க முழுக்க கதாநாயகனை மையப்படுத்தி அமைந்திருந்தது.

இதையடுத்து இவர் இயக்கத்தில் இரவின் நிழல் திரைப்படத்தை எடுத்துள்ளார்.இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள முதல் லீனியர் திரைப்படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் திகதியை இன்று மாலை 6 மணிக்கு தனுஷ் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement