• Nov 14 2024

நடிகர் தனுஷ் அணிந்துள்ள உடையின் விலை மட்டும் இத்தனை அயிரமா? சொக்கிப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2002ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவருடைய முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் அதிகமாக குவிய தொடங்கின. தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன் போன்ற பல படங்களில் நடித்தார். தன்னுடைய இயல்பான நடிப்பினால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.

இவர் நடிகராக மட்டுமன்றி திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் ,திரைக்கதையாசிரியர், இயக்குநர் என பல்துறை திறமை கொண்டவராக விளங்குகின்றார்.

அத்தோடு இவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் The Gray Man, ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் அவர் இணைந்து நடித்துள்ள இப்படத்தை கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து வருகிறது.

இத்தனை நாட்களாக தனுஷ் அப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அமெரிக்கா சென்றிருந்த நிலையில், அவர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். மும்பையில் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி பரவி வந்தன.

இதற்கிடையே தற்போது இவர் அணிந்திருந்த உடை குறித்து தான் இணையத்தில் பரவி வருகிறது. நீல நிற பர்பெர்ரி ஹூடியுடன் போஸ் கொடுதிருந்தார், அந்த ஹூடியின் விலை சுமார் ரூ.67,000 இருக்குமாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement