இந்தி திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் தர்மேந்திரா. இவர் நடிகை ஹேமமாலினியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தற்போது 87 வயதாகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் தர்மேந்திராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 4-ஆம் தேதி அமெரிக்காவுக்கு சென்றார். சிகிச்சையின் நோக்கமாக அவர் 20 நாட்கள் வரை அமெரிக்காவில் தங்கி இருப்பார் என்று கூறப்பட்டது.
இதனையடுத்து நேற்றிரவு இவரின் உடல்நிலை தொடர்பாக வதந்தி பரவியது. இதுகுறித்த வதந்தியினால் பதறிப்போன நடிகர், வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டு அதில் "அமெரிக்காவில் நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையை அனுபவித்து வருகிறேன். விரைவில் எனது புதிய படத்துக்கு வருவேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவலானது அவரது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்துள்ளது.
Listen News!