• Sep 20 2024

கல்லூரி மாணவிகளுடன் தனது பிறந்தநாளை சூப்பராக கொண்டாடிய நடிகர் துருவ்-வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இளம் நடிகர் துருவ் விக்ரம், ரசிகைகள் மற்றும் மாணவிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, பிறந்தநாளான இன்று சென்னையிலுள்ள மகளிர் கல்லூரியில் நடைபெற்ற 'Battle Fest 2022'  எனும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான துருவ் விக்ரம், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற 'Battle Fest 2022' என்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிலையில் அவருக்கு மாணவிகள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர் இந்த புகைப்படங்கள் தற்போது  சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.



பொதுவாக நடிகர்கள் தங்களது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடுவது வழக்கமான ஒன்று தான். மேலும் அந்த வகையில் மில்லியன் கணக்கிலான ரசிகர்களை கொண்டிருக்கும் இளம் நடிகர் துருவ் விக்ரம், ரசிகைகள் மற்றும் மாணவிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, பிறந்தநாளான இன்று சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் நடைபெற்ற 'Battle Fest 2022'  எனும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


அதன் போது, இன்று துருவ் விக்ரமின்  பிறந்த நாள் என்பதை அறிந்த கல்லூரி மாணவிகள், கேக் வெட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். எனினும்  இதனையடுத்து மாணவிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் இசையில் வெளியான 'மனசே..' என்ற சுயாதீன இசை ஆல்பம் பாடலை பாடினார். அத்தோடு பாடி முடித்ததும் மாணவிகள் கை தட்டி அவரை பாராட்டினர்.


இதனிடையே இன்று சர்வதேச இதய நாள் என்பதாலும், ஏராளமான இதயங்களை வென்ற துருவ் விக்ரமின் பிறந்த நாள் என்பதாலும், அவர் எழுதிய ’மனசே..’ எனும் பாடல் பாடியது பொருத்தமாகயிருந்தது என கல்லூரி மாணவிகள் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement