• Nov 17 2024

7நாட்களாக சாப்பாடு கொடுக்காமல் மனைவியை கொடுமைப்படுத்திய பிரபல நடிகர்.. பகீர் கிளப்பும் புகார்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நவாசுதீன் சித்திக். இவரது மனைவி ஜைனப் என்ற ஆலியா சித்திக். இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சந்தோசமாக வாழ்ந்து வந்த இவர்களின் வாழ்க்கையில் புயல் வீசியது போல பல சச்சரவுகள் கிளம்பத் தொடங்கின. 


அந்தவகையில் கடந்த 2021 இல் நவாசுதீன் தன்னுடைய மனைவிக்கு வாட்ஸ்அப்பில் விவாகரத்து செய்தியினை வழங்கினார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சொத்து தகராறில், நவாசுதீன் சித்திக்கின் தாயார் மெகருனிசா சித்திக் மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தில் தனது மருமகளான ஜைனப் மீது புகார் ஒன்றை அளித்தார். 


அதில் அவர் குறிப்பிடுகையில் "ஜைனப் எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து என்னுடன் தாறுமாறாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், என்னை கடுமையாக தாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த புகாரினைத் தொடர்ந்து போலீசார் ஜைனப் சித்திக் மீது வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல், காயப்படுத்துதல், தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

ஆனாலும் இந்த வழக்கில் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்த விசாரணை பல கோணத்தில் நடந்து வருகிறது. மேலும் நடிகர் நவாசுதீன் சித்திக், அவரது மனைவி மற்றும் அவரது தாய்க்கு இடையேயான சொத்து தகராறில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. 


இந்த நிலையில் ஜைனப் என்ற ஆலியாவின் உடைய வழக்கறிஞர் ரிஸ்வான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில் "நவாசுதீன் சித்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆலியாவை வீட்டிலிருந்து அகற்ற தேவையான எல்லாவற்றையும் செய்தனர். அவர்கள் அவர் மீது அத்துமீறல் மற்றும் குற்றப் புகாரை பதிவு செய்தனர். பின்னர், போலீஸ் மூலம் அவர்கள் அவரை கைது செய்வதாக மிரட்டினர். அவரை சுற்றி ஆண் பாதுகாவலர்களை நியமித்துள்ளனர். 

அத்தோடு அவர் தனது தனது மைனர் குழந்தைகளுடன் வசிக்கும் மண்டபத்தில் சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளனர். போலீஸ் துறையின் செயல்கள் மற்றும் தோல்விகளை நான் நேரடியாகக் கூற விரும்பவில்லை, ஆனால் போலீஸ் அதிகாரிகளின் முன் அவர் அவமதிக்கப்பட்டாலும், அவரின் உரிமைகளைப் பாதுகாக்க எந்த போலீஸ் அதிகாரியும் வரவில்லை என்பதுதான் உண்மை. 

மேலும் கடந்த 7 தினங்களாக சாப்பாடு கொடுக்காமல், பாத்ரூம் போக விடாமல், குளிக்கவிடாமல் ஆலியாவைக் கொடுமைப்படுத்தி உள்ளனர். இருந்தாலும் அவர் மீது நவாசுதீன் சித்திக்கும், அவரது தாயாரும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு பல குற்றவழக்குகளை கொடுத்திருக்கின்றனர்" என கூறி உள்ளார்

Advertisement

Advertisement