மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் உன்னி முகுந்தன். இவர் சமீபத்தில் வெளியான 'மாளிகப்புரம்' என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். குறிப்பிட்ட ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அதன் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி இருக்கின்றார்.
மேலும் 'மாளிக்கப்புரம்' படமானது அதிகளவான வசூலினை ஈட்டி வெற்றி பெற்றிருக்கின்றது. இந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்ற உன்னி முகுந்தனுக்கு தற்போது எதிர்பாராத விதமாக ஒரு சிக்கல் வந்துள்ளது. அதாவது 2018-ஆம் ஆண்டு இளம் பெண் ஒருவர் உன்னிமுகுந்தன் மீது பாலியல் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்திருந்தார்.
அதாவது தன்னை படத்தின் கதை பற்றி கதைப்பதற்காக வர சொல்லி விட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் புகாரில் கூறியிருந்தார். இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் உன்னி முகுந்தனின் வழக்கறிஞர் இந்தப் பிரச்சினையை கோர்ட்டுக்கு வெளியே தீர்த்து கொள்கின்றோம் எனக் கூறி பிரமாண பத்திரம் ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
இவரின் கருத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. இந்நிலையில் தற்போது உன்னி முகுந்தன் மீது வழக்குத் தொடர்ந்த அந்தப் பெண் மீண்டும் கோர்ட்டில் நேரடியாக ஆஜராகி "உன்னி முகுந்தன் தரப்பு இதுவரை என்னுடன் எந்தவொரு சமரச பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை, எந்தவொரு சமரச ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை, எனவே தொடர்ந்து வழக்கினை நடத்த வேண்டும்" எனக் கூறி புதிய மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதோடு நடிகர் உன்னி முகுந்தனுக்கு நோர்ட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில் இந்த வழக்கு விசாரணை ஆனது 17-ஆம் தேதி மீண்டும் ஆரம்பமாக இருக்கின்றது.
Listen News!