• Sep 20 2024

நடிகர் கவின் மற்றும் மோனிகாவின் reception photos - அடடே நம்ம சிவகார்த்திகேயன் எல்லாம் போயிருக்காரே

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் பிரபலமானவர் கவின். தொடர்ந்து சில சீரியல்களில் நடித்திருந்தார். அதன் பிறகு 2017ஆம் ஆண்டு வெளியான ‘சத்ரியன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். 2019ஆம் ஆண்டு நடந்த ‘பிக்பாஸ்’ சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


இதனைத் தொடர்ந்து ‘நட்புனா என்னான்னு தெரியுமா’, ‘லிஃப்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு கவின் நடித்து வெளியான ‘டாடா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.


இந்த நிலையில், தனது காதலியான மோனிகாவுடன் கவினுக்கு ஆகஸ்ட் 20ம்தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். 


சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கவினுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இவர்களது ரிஷப்ஷன் பங்சன் கோலாகலமாக நடந்துள்ளது. இந்த நிகழ்வுக்கு சிவகார்த்திகேயன், யூடியூபர் இர்பான், இயக்குநர் நெல்சன் என பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement