• Sep 21 2024

இளம் நடிகையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் ஜெய்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவராகத் திகழ்பவர் நடிகர் ஜெய்.இவர் தனது 16-ஆவது வயதில் "பகவதி" என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பியாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்து அதன் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து "கோவா, வாமனன், எங்கேயும் எப்போதும், வடகறி, மற்றும் திருமணம் எனும் நிக்காஹ்" போன்ற பல படங்களில் நடித்திருக்கின்றார். கதாநாயகனாக மட்டுமல்லாது தற்போது இவர் வில்லனாகவும் நடிக்கத் தொடங்கி விட்டார். அதாவது சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் "பட்டாம்பூச்சி " என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் கொலைகார சைக்கோவாக, வில்லனாக நடிகர் ஜெய் புதியதொரு அவதாரம் எடுத்து இருக்கின்றார்.

இந்நிலையில் நடிகர் ஜெய் கலெக்டராக வர வேண்டும் என்று ஆசைப்பட்ட இளம் நடிகை ஒருவருக்கு உதவி செய்துள்ளதாக குறிப்பிட்டு செய்தி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது.

அதாவது "களவாணி" என்ற படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்த நடிகை மனிஷா பிரியதர்ஷினி தற்போது தங்கை மட்டுமல்லாது ஹீரோயின் தோழி போன்ற கதாபாத்திரங்களிலும், மற்றும் சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்து வருகின்றார். நடிப்பில் மட்டுமன்றி இவர் படிப்பிலும் அதிகளவில் கவனம் செலுத்தி வருகின்ற ஒருவராகவே காணப்படுகின்றார்.

தற்போது நடிகை மனிஷா பிரியதர்சினி தன்னுடைய சட்டப் படிப்பு முடித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவருடைய அம்மாவிற்கு எப்படியாவது தனது மகள் மனிஷா பிரியதர்சினி கலெக்டர் ஆக வேண்டும் என்பது ஆசை. அதற்காகத் தற்போது இவர் சிவில் பயிற்சித் தேர்வில் கலந்து கொண்டிருக்கின்றார். எனினும் இவர் தற்போது பயிற்சிக் கட்டணம் கட்ட முடியாமலும், புத்தகம் வாங்க முடியாமலும் தவித்து இருக்கின்றார்.

இந்நிலையில் இதனைக் கேள்விப்பட்ட நடிகர் ஜெய் மனிஷா பிரியதர்ஷினியை அழைத்து அவரைப் பாராட்டி இருக்கின்றார். அது மட்டுமல்லாது பயிற்சிக் கட்டணம் முழுவதும் தான் கட்டுவதாகவும் புத்தகங்களினை வாங்குவதற்கான பண உதவியையும் தான் வழங்குவதாக மனிஷா பிரியதர்ஷினிக்கு கூறியுள்ளார் நடிகர் ஜெய்.

இந்நிலையில் நடிகர் ஜெய் செய்த இந்த உதவியை பலரும் தமது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவரைப் பாராட்டி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement