பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழ் டிவியில் 'சரிகமப' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடர்பான ப்ரோமோ வீடியோ ஒன்று ரிலீஸ் ஆகி உள்ளது.தற்போது சரிகமபா லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 3-ஐ வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது.
இதில் பல சிறுவர்களும் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாடல் சுற்றுக்கள் நடைபெறும் போதும் சிறப்பு விருந்தினர்கள் வருகை தருகின்றனர். அந்த வகையில் இந்த முறை ONE on ONE Round நடைபெறுகிறது .அதில் கலந்துகொள்வதற்காக நடிகர் ஜெயம் ரவி அவர்கள் சரிகமப நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். விஜே அர்ச்சனா அவர்கள் வரவேற்க நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் ஜெயம் ரவி அவர்களை அனைவரும் கரகோசத்தோடு வரவேற்றனர்.
சிறுவர்களின் பாடல்களை பார்க்க வந்த ஜெயம் ரவி அவர்களே பிரமிக்கும் அளவுக்கு "செந்தூரா.." பாடலை பாடி அசத்தியுள்ளார் இலங்கை குயில் கில்மிஷா. செந்தூரா பட ஷூட்டிங் போயிட்டு வந்தமாதிரி இருக்கு , அந்த பாடலை விட இது அருமையா இருக்கு என்று கூறிய ஜெயம் ரவி அவர்கள் மேலும் தான் நடித்த "ஜெயம்" படத்தில் உள்ளபாடலை ஒரு சிறுமி வித்தியாசமாக பாட வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஜெயம் ரவி சரிகமபா நிகழ்ச்சியில் பாடல் பாடிய சிறுவர்களுடன் ஆடல் பாடல் என ரொம்ப குதூகலமாக இன்றைய ப்ரோமோ வீடியோ ரிலீஸ் ஆகி இருக்கு.
Listen News!