தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் ஜுவா. இவர் பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி சௌத்திரியின் மகன் என்பதும் முக்கியமாகும்.இருக்கு சினிமாவில் நுழைய எளிதில் வாய்ப்புக் கிடைத்திருந்தாலும் தனது விடா முயற்சியினாலே தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்துள்ளார்.
ஜீவாவின் சகோதரர் ஜித்தன் ரமேஷும் நடிகராக தான் இருந்து வருகிறார் . பள்ளிக்கூடத்தில் இருக்கும் ரூல்ஸை மீறி ஜீவா எப்போதும் ஃபுல் ஸ்லீவ் சட்டை தான் அணிந்து செல்வாராம். நீளமான முடி, அப்பாவின் perfume என எப்போதும் ரகளை செய்து ரூல்ஸை மீறும் பையன் தான் ஜீவா.
அத்தோடு ஜுவா நடிப்பைத் தாண்டி கிரிக்கெட் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் சிசிஎல் என்ற நடிகர்கள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி இருக்கிறார். இவர் தனது நீண்ட நாள் நண்பியையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நீதானே என் பொன்வசந்தம் படத்தில் வரும் பாதி காட்சிகள் என் வாழ்க்கையிலும் நடந்தது என ஜீவா ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பார்.
தற்போது ஜீவா - சுப்ரியா ஜோடிக்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.ஜீவாவுக்கு உயரத்தை பார்த்தாலே பயமாம். அவருக்கு acrophobia இருக்கிறது என அவரே தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!