தமிழ் சினிமாவில் நடிப்பு திறமையால் உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்காவைத்தவர் தான் நடிகர் கமல்ஹாசன் .தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அவரது ஆசையாகும். அந்த ஆசையின் காரணமாகவே அவர் ஐந்து வயது முதல் சினிமா துறையில் ஈடுபட்டு இன்று மக்களிடத்தே உலக நாயகன் என பெயர் பெற்று இருக்கின்றார்.
அந்தவகையில் கமல்ஹாசன் சில ஆண்டுகள் படங்களில் பெரிதாக நடிக்கவில்லை. பின்னர் விக்ரம் படத்தில் கதாநாயகனாக நடித்து கமல் மீண்டும் உத்வேகம் பெற்றார். இந்நிலையில் பல படங்களுக்கு கமிட் ஆகி இருந்த நிலையிலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தயார்படுத்தல் இடம் பெறும் வேளையிலும் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்ட கமல் தற்கொலை எண்ணத்தை பற்றியும் அதனை தாண்டி வாழ்வதை பற்றியும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசியிருந்தார்.
எனக்கும் தற்கொலை எண்ணம் வந்துள்ளது. என்னதான் ஐந்து வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்தாலும் இளைஞனான பின்பு எனக்கு நடிக்க வாய்ப்புகளே இல்லை. அந்த சமயத்தில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் எனக்கு வந்தது. இருந்தாலும் என்னதான் நடக்கின்றது என பாப்போமே என்ற தைரியத்தை வரவழைத்து போராடினேன். இன்று உங்கள் கண்முன் கமல்ஹாசனாக நிற்கின்றேன்.
வாழ்க்கையில் சாதித்த அதிகமானோர் தற்கொலை எண்ணத்தை தாண்டி தான் வந்துள்ளனர். எனவே அந்த எண்ணத்தை கைவிட்டு வாழ்க்கையில் சாதிக்கும் முயற்சியில் இறங்கவேண்டும் என மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக உலகநாயகன் பேசியுள்ளார்.
Listen News!