• Nov 19 2024

நடிகர் கமல்ஹாசன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி -கதறும் ரசிகர்கள்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் காய்ச்சல், சளி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 7 ஆம் தேதி தனது 68 வது பிறந்த நாளை கொண்டாடினார். எனினும் தற்போது பிக்பாஸ் சீசன் 6 ஐ கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகின்றார். அத்தோடு கடந்த வாரம் அழகாக கோட்டு சூட்டில் கமல் வந்து நிகழ்ச்சியை வழங்கினார். அப்போது நுணுக்கமாக சில விஷயங்களை அவர் பாணியில் கேட்டு அதற்கு உரிய அறிவுரைகளையும் கமல் வழங்கினார்.

தற்போது இந்தியன் 2 படத்தில் நடிப்பதால் அதற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்து உடலை கட்டுகோப்பாக வைத்துக்கொண்டு வருகிறார். கமல்ஹாசன், அடுத்து சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் அதில் மணி ரத்ம்னம் இயக்கத்தில் ஒரு படமும் உண்டு. சமீபத்தில் அவர் ஐதராபாத் சென்று வந்தார்.

இவ்வாறுஇருக்கையில் சென்னையில் தங்கியிருந்த கமலுக்கு கடந்த சில நாட்களாக சளி, இருமல், காய்ச்சல் இருந்துள்ளது.எனினும்  இதற்காக மருத்துவரை பார்த்த நிலையில் தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் இது தொடர்ந்தால் படப்பிடிப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சி பாதிக்கப்படும் என்பதால் உடல் பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளார்.

எனினும் இதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு நேற்று இரவு கமல் சென்றார். இங்கு சளி, காய்ச்சலுக்காக உடல் பரிசோதனையும், வேறு ஏதாவது பிரச்சினை இருக்க வாய்ப்பிருந்தால் அதையும் பரிசோதனை செய்துக்கொள்ள் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முழு உடல் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

இன்று காலை முழு உடல் பரிசோதனைக்கு பின் தேவையெனில் ஓய்வு எடுக்கலாம், அல்லது இன்றே வீடு திரும்பலாம் என சொல்லப்படுகிறது. கமலுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. காரணம் கொரோனா தாக்குதலின்போதே மருத்துவமனையிலிருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் நடத்தியதாக சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் தெரிவித்தார். ஆகவே அவரது மன உறுதி முன் அனைத்தும் எளிதாக நடக்கும், எனவே இது சாதாரண காய்ச்சலுக்கான பரிச்சோதனைக்கான அனுமதியே என அவர் தரப்பில் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement