நடிகர் என்பதைத் தாண்டி கமல்ஹாசன் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவராக விளங்குகின்றார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனை அடுத்து தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது. இவ்வாறாக சினிமாவில் கலக்கி வந்தாலும் நடிகர் கமல்ஹாசன் அரசியலிலும் கால் பதித்து அங்கும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.
அந்தவகையில் 2018ல் அவர் புதிதாக அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கி தேர்தலைச் சந்தித்து கணிசமான வாக்குகளைப் பெற்றாலும் குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் பெறவில்லை. இருந்தபோதும் அடுத்த அடுத்த தேர்தலுக்கும் தயாராகி வருகின்றார்.
இந்நிலையில் தற்போது வெளிநாடு பயணத்தை முடித்து நாளை தமிழகம் திரும்பும் கமல்ஹாசன் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கட்சியினருடன் இணைந்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளாராம். அதாவது நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? அல்லது இந்தியா கூட்டணியில் இடம் பெறலாமா என்பது குறித்து ஆலோசிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க கமல்ஹாசனுக்கு மாநில செயற்குழு அதிகாரம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!