• Nov 10 2024

ஆஸ்திரேலியா அமைச்சரை திடீரென சந்தித்துப் பேசிய நடிகர் கமல்ஹாசன்- ஓ இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்படம் இதுவரை 450 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்த வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் இவரது எனர்ஜி காணப்படுகிறது.இதை அவரது பல படங்கள் எடுத்துக் காட்டியுள்ள போதிலும், விக்ரம் படம் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தின் வசூல் சாதனையை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை அறிவித்து வருகிறார். கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி ஜோடி சேர்ந்து நடிக்கும் அடுத்த படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளது. மேலும் தன்னுடைய நடிப்பிலும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார்.

தற்போது தளபதி 67 படத்தில் கவனம் செலுத்திவரும் லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்தை முடித்துவிட்டு விக்ரம் 3 படத்தை இயக்கவுள்ளார். அந்தப் படத்தையும் கமல்தான் தயாரிக்கவுள்ளார். இதை முன்னதாகவே அவர் விக்ரம் படத்தின் சக்சஸ் மீட்டில் தெரிவித்துள்ளார்.

கமலின் விக்ரம் படம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் சக்கை போடு போட்டது. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் தனது அடுத்தப்படத்தின் சூட்டிங் குறித்த வேலைகளில் இறங்கியுள்ளார் கமல். இதுகுறித்து அந்நாட்டு அமைச்சர்களும் அவர் பேசியுள்ளார். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement