• Sep 21 2024

அந்த இடத்தில் முத்தம் கொடுத்த நடிகர் கமல்- ஷாக்கான நடிகை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாகவும், உலக நாயகனாகவும் கொடி கட்டிப் பறந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவரின் நடிப்பிற்கும் சுவாரஸியமான கதைக்கும் என்றே தமிழ் நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராகவும் கோடிக்கணக்கான ரசிகர் கூட்டம் உண்டு. தொட்டதெல்லாம் தூள் பறக்கும் என்று கூறுமளவிற்கு இவர் எந்தப் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் உடனே வெற்றி பெற்று விடும்.

இந்த நிலையில் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த ‘விக்ரம்’ படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பெரியளவில் வசூலை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலில் “விக்ரம்” இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலாவது இடத்திலும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்தோசத்தை கொண்டாடும் விதமாக நம்ம உலக நாயகனின் ரசிகர்கள் அவரின் கடந்தகால போட்டோஸ் மற்றும் வீடியோக்களினை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் இவர் நடித்த பல படங்களில் ஒரிரு முத்த காட்சியாவது இடம்பெரும். அப்படி இன்று வரை ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒன்று தான்,புன்னகை மன்னன் படத்தில் இடம்பெற்ற முத்த காட்சி.

இந்த படத்தின் துவக்கத்தில் இடம்பெரும் பாடல் ஒன்றில், நடிகை ரேகாவுடன் கமல் ஹாசனுக்கு முத்தகாட்சி இடம்பெற்றது.

இந்நிலையில் இந்த முத்த காட்சி, ரேகாவிடம் சொல்லாமல் எடுக்கபட்டதாம். ஆம், ரேவாவிடம் சொல்லாமல் காட்சி எடுக்கும்பொளுது ரேகாவை முத்தமிட்டு விட்டாராம் கமல். இதனால், நடிகை ரேகா பதறிப்போனாதாக பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். அது மட்டுமின்றி இந்த விஷ்யத்தை இயக்குநர் கூட தன்னிடம் கூறவில்லை என்று ரேகா தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement