கார்த்திக் ராஜ் என்பவர் தமிழ் நாட்டை சேர்ந்த தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் 2011ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றார்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற தொடரிலும் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஆனார்.
அதுமட்டுமல்லாமல் 2017 ஆம் ஆண்டில் சென்னை டைம்ஸ் செய்தித்தாளில் மிகவும் விரும்பத்தக்க 15 தொலைக்காட்சி ஆண்களில் கார்த்திக் ராஜ் 14 வது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2018ஆம் ஆண்டு 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த நடிகர் போன்ற விருதுகளை வென்றுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் கார்த்திக் ராஜ். சிறு இடைவெளிக்குப் பிறகு தற்போது இவர் மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள கார்த்திகை தீபம் என்ற சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.
இந்த சீரியல் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. கார்த்திகேயா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடிக்க தீபா என்ற நாயகி கதாபாத்திரத்தில் ஹர்த்திகா என்பவர் நடிக்கிறார்.
Listen News!