ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேஸி மீது 4 ஆண்கள் கடந்த 2001ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடர்ந்தனர்.
அனுமதியில்லாமல் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அத்துமீறி அந்தரங்க பகுதிகளில் கைவைத்து அழுத்தியதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
1986ம் ஆண்டு வெளியான ஹார்ட் பர்ன் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானவர்.1999ம் ஆண்டு வெலியான அமெரிக்கன் பியூட்டி படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற இவர் ஹாலிவுட்டில் மிகப்பெரிய நடிகராக வலம் வந்தார்.
ஹாலிவுட்டில் மீடூ சர்ச்சைகள் பெரிதளவில் வெடித்த நிலையில், பல பிரபலங்கள் வழக்கில் சிக்கினர். நடிகர் கெவின் ஸ்பேஸி மீது 4 ஆண்கள் 9 விதமான பாலியல் வழக்குகளை தொடுத்து நடிகரை பெருந்துயருக்கு ஆளாக்கினர்.
லண்டன் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் தொடர்ந்து தன் மீது எந்தவொரு குற்றமும் இல்லை. நான் யாரிடமும் தவறாக நடக்கவில்லை என்றும் என் முதுகில் குத்தவும் என்னுடைய புகழை கெடுக்கவுமே இப்படி பணத்துக்காக பொய் வழக்கு தொடுத்துள்ளனர் என வாதாடி வந்தார்.
விடுதலை கிடைத்ததும் கதறி அழுதுவிட்டார்: இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து தரப்பு வாதங்களும் விசாரித்ததில் எந்தவொரு ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகள் எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து நடிகர் கெவின் ஸ்பேஸியை விடுதலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Listen News!