• Sep 21 2024

நடிகர் கிட்டி கிருஷ்ணமூர்த்தியின் காதல் திருமணம் இப்படி தான் நடந்ததா..? அவரது மனைவியை பார்த்துள்ளீர்களா.?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

1987- ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘நாயகன்’ என்ற படத்தில் வில்லனாக அறிமுகமானவர் தான் ராஜா கிருஷ்ணமூர்த்தி.

மேலும் இவரது இயற்பெயர் ராஜா கிருஷ்ணமூர்த்தி. இவர் திரையுலகில் வந்ததன் பிற்பாடு கிட்டியென மாற்றிக் கொண்டார்.

இவர் நடிகர் மட்டுமல்லாது தயாரிப்பாளர், இயக்குநர் என திரையுலகில் அறியப்பட்ட அவர் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்தவர். பல்வேறு பிரபல நிறுவனங்களில் எச்ஆர் பிரிவில் உயர் பொறுப்புகளை வகித்தவர்.

கமல்,ரஜனி,விஜய் அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.நாயகன், என் தங்கச்சி படிச்சவ துவக்கம் 75இக்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியவர், தொலைக்காட்சிப் படைப்புகளிலும் தோன்றியுள்ளார். தசரதன், கிருஷ்ணா ஆகியபடங்களை இயக்கியுமுள்ளார்.

இந்நிலையில் இவர் தனியார் ஊடகம் ஒன்றிற்கு இவரது மனைவியுடன் சேர்ந்து பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் தனது மனைவியை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டதாகவும்.அதாவது பாம்பையில் இருந்து அவரது குடும்பத்துடன் ராக்சியில் வந்து இறங்கிய போது தான் முதல் தடவையாக அவரை சந்தித்ததாகவும் அன்றில் இருந்தே அவரை காதலித்ததாகவும் கூறி இருந்தார்.

அத்தோடு தனது மனைவிக்கு தான் ப்ரபோஸ் பண்ணியதும் அதற்கு அவரது மனைவி நோ சொல்லிவிட்டாராம்.இதற்கு பிறகு அவரது அம்மாவை கூட்டிட்டு போய் எல்லா விடயத்தையயும் கூறினாராம்.என்று தமது வாழ்க்கையை பற்றி பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில் அவரது மனைவியின் புகைகப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement