பூந்தோட்ட காவல்காரன்’ என்ற படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகியவர் தான் லிவிங்டன்.தொடர்ந்து படங்களில் வில்லனாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் இன்னசண்ட் கலந்த காமெடி வில்லனாக மாறினார். அத்தோடு கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார்.
சுந்தர புருஷன் பட கதையை அவரே எழுதி ஹீரோவாக நடித்தார்.. அதன்பின் சொல்லாமலே, விரலுக்கேத்த விக்கம் என சில படங்களில் ஹீரோவாக நடித்தார். எல்லாமே வெற்றிப்படங்கள்தான். ஆனால், ஹீரோவாக தொடர்ந்து அவர் நடிக்கவில்லை. காமெடி கலந்த வில்லன் வேடங்களில் நடித்து வந்தார்.
ஒருகட்டத்தில் குணச்சித்திர நடிகராகவும் மாறிவிட்டார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய லிவிங்ஸ்டன் கூறிய விடயம் தற்பொழுது வைரலாகி வருகின்றது, எனக்கு நடிப்பதை விட பாடுவதில் அதிக ஆர்வம் உண்டு. இளையராஜா பல திரைப்படங்களுக்கு அமைத்த பின்னணி இசைகளும் எனக்கு மனப்பாடம்.
பாக்கியராஜிடம் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தேன். ஒருமுறை இளையராஜாவை சந்தித்து பாட்டு பாட வாய்ப்பு கேட்க வேண்டும் என நினைத்தேன். அப்போது எனக்கு எதுவுமே தெரியவில்லை. ஏவிஎம் ஸ்டுடியோவில் அவர் சீரியஸாக ஒரு பாடலுக்கு நோட்ஸ் எழுதி கொண்டிருந்தார்.
அங்கு சென்ற நான் அவரின் முதுகில் தட்டி ‘நான் நன்றாக பாடுவேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க’ என்றேன். கோபத்தில் அவரின் கண்கள் சிவந்துவிட்டது. அவரின் உதவியாளரை அழைத்து கண்டபடி திட்டி என்னை வெளியே அனுப்ப சொன்னார். அவர் என்னை தரதரவென இழுத்து கீழே அழைத்து சென்று அவரும் என்னை இஷ்டத்துக்கும் திட்டினார்.
‘வாய்ப்புதானே கேட்டோம் ஏன் இப்படி திட்டுகிறார்கள்?’ என எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் செய்தது தவறு என புரியவே எனக்கு பல வருடங்கள் ஆனது. அதன்பின்னர்தான் பாக்கியராஜிடம் சேர்ந்து அவரிடம் உதவி இயக்குநராக வேலை செய்தேன்’ என லிவிங்ஸ்டன் கூறியிருந்தார்.
Listen News!