• Sep 21 2024

ஒடிசா மாநில முதல்வரை குடும்பத்துடன் சென்று சந்தித்த நடிகர் மாதவன்- அடடே இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மட்டுமல்லாது 3 இடியட்ஸ், ரங்தே பசந்தி உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்து புகழ்பெற்றார்.அண்மையில் இவரது இயக்கத்தில் வெளியான ராக்கெட்ரி திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகமான இஸ்ரோவின் முன்னாள் ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன் அவர்களது வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

மேலும் இவரது மகனான வேதந்த் கடந்த ஆண்டில் நடைபெற்ற லித்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றதுடன், டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற டேனிஷ் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற 48-வது ஜூனியர் நேஷனல் அக்வாடிக் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று அசத்தினார் வேதாந்த்.இதனால் ஒடிசா மாநிலத்தின் முதல்வர் நவீன் பட்நாயக் மாதவன் மற்றும் அவரது குடும்பத்தை நேரில் வரவழைத்து வேதந்தை பாராட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து, நடிகர் மாதவன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"மாண்புமிகு முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். விளையாட்டுத் துறையில் ஒடிசா முக்கிய மாநிலமாக திகழ்வதற்கு நீங்கள் எடுத்துவரும் முயற்சிகள் அபரிமிதமானவை. விளையாட்டு துறையின் எதிர்காலத்திற்கான உங்களது திட்டங்கள் புத்துணர்ச்சி அளிக்கக்கூடியவை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement