இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் நடிகர் மம்முட்டி ரம்யா பாண்டியன், மறைந்த நடிகர் பூ ராமு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய திரைப்படம் தான் நண்பகல் நேரத்து மயக்கம் .தமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார், தமிழ்நாட்டின் பழனி பகுதியில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது.
இந்நிலையில், இன்று திரையரங்குகளில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தை ரசிகர்கள் வெகுவாக புகழ்ந்து வருகின்றனர்.அந்த வகையில் டுவிட்டரில் அவர்கள் தெரிவித்த விமர்சனம் குறித்து பார்ப்போம்.
டுவிட்டரில் அவர்கள் தெரிவித்துள்ள விமர்சனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இந்தப் படம் முழுவதும் மம்முட்டி கட்டம் போட்ட அழுக்கு லுங்கி, சட்டை என வித்தியாசமான லுக்கில் நடித்துள்ளார். நண்பகல் நேரத்து மயக்கம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரசிகர் ஒருவர், கதை, திரைக்கதை என ஸ்க்ரிப்ட் ஒர்க்கில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி அசத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மம்முட்டியின் நடிப்பு பிரமாதம் அவருக்கு தேசிய விருது கிடைக்கும், படத்தில் காமெடி காட்சிகள் நன்றாக வந்துள்ளன. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு சூப்பர் என பதிவிட்டுள்ளார்.
இன்னொரு ரசிகரும் மம்முட்டியின் நடிப்பு பற்றி என்ன சொல்லவென்றே தெரியவில்லை. ஜேம்ஸ், சுந்தரம் என படத்தில் வரும் பாத்திரங்களின் பெயர்களை குறிப்பிட்டும், அந்த காட்சிகளில் மம்முட்டி நடித்தது குறித்தும் பாராட்டியுள்ளார். அதேபோல் மேலும் ஒரு ரசிகரும் இது மம்முட்டியின் மாஸ்டர் பீஸ் திரைப்படம் என புக்ழ்ந்துள்ளார். லிஜோ ஜோஸ் பெல்லிசேரியும் மம்முட்டியும் இணைந்து அற்புதமான திரை அனுபவத்தை கொடுத்துள்ளதாகவும், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் அசத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள பழைய பாடல்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் இன்னொரு நெட்டிசனும் மம்முட்டியின் நடிப்பு தான் படத்துக்கு பெரிய பலம் என்றுள்ளார்.மீண்டும் ஒருமுறை தனது சிறந்த நடிப்பை மம்முட்டி வழங்கியுள்ளார். லிஜோ ஜோஸ்ஸின் டைரக்ஷன், திரைக்கதை அட்டகாசம் என விமர்சனம் செய்து 4.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்துள்ள ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாவில் மம்முட்டிக்கும் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ், மலையாளம் என இருதரப்பிலும் நண்பகல் நேரத்து மயக்கம் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனமும், நல்ல ரேட்டிங்கும் கிடைத்துள்ளன.
Listen News!