• Sep 20 2024

நடிகர் மணிவண்ணனின் மகனும் நடிகர் தானா...வெளியானது புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், எழுத்தாளராகவும், நடிகராகவும் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருப்பவர் தான் நடிகர் மணிவண்ணன். எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் ஏற்று நடிக்கும் தன்மை கொண்ட இவர் தந்தையாகவும், வில்லனாகவும் குணசித்திர வேடங்களில் நடிக்கும் இயல்பு கொண்டவர்.


பாரதிராஜா இயக்கத்தில் 1980-இல் "நிழல்கள்" படத்தின் மூலம் அறிமுகமானவர் மணிவண்ணன். இதனைத் தொடர்ந்து பாரதிராஜாவின் "கொடி பறக்குது" என்ற திரைப்படம் மூலமாக வில்லனாக அறிமுகமானார். தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் போன்றோருடன் நடித்துள்ளார்.


பல்வேறு படங்களில் தனக்கென உரித்தான பாணியில் வசனங்களை சர்வசாதாரணமாக பேசி தனது நடிப்பை வெளிப்படுத்தி, சிறந்த இயக்குநர் மட்டுமன்றி பெரிய நடிகர் என்பதை நிரூபித்துள்ளார்.

பின்னர் மணிவண்ணன் அவர்கள் செங்கமலம் என்பவரை மணமுடித்தார் அவருக்கு ஜோதி என்ற மகளும் ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இவர் தனது மகனுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதோ அந்த புகைப்படங்கள்....





Advertisement

Advertisement