இயக்குநரும் நடிகருமான மனோபாலா கல்லீரல் பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். 69 வயதான மனோபாலா, கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மேலும், கமலின் இந்தியன் 2 உட்பட சில படங்களிலும் பிஸியாக நடித்து வந்தார். ஆனால், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட மனோபாலா இன்று காலமானார்.
இதனையடுத்து சாலிகிராமத்தில் உள்ள மனோபாலாவின் உடலுக்கு திரை பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தளபதி விஜய்யும் நடிகர் மனோபாலா உடலுக்கு அவரது இல்லம் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.
இந்த நிலையில் மனோபாலா கதிர்வேல் இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கும் படத்தில் நடித்துள்ளார். இந்த பட ஷுட்டிங்பின் போது தான் தனது கடைசிப் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். அங்கு கேக் வெட்டிக் கொண்டாடிய வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.
மேலும் இந்தக் கொண்டட்டத்தில் நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர் ,இளவரசு ,மாரிமுத்து ,விச்சு, படவா கோபி, கணேஷ்கர் என பலரும் இருந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!